Website Hit Tracking

Wednesday, May 28, 2008

"சார்லி சாப்ளின்" ஹைக்கூ பார்வையில்

சார்லி சாப்ளின்





யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம்
the great dictator

இந்த படத்தை ஹிடலர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல்
திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப
பார்த்துக்கொண்டே இருந்தானாம்!


'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது...!

தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு,தன் கணவனை விட,பிள்ளைகளின் உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.

ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார்.முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'.

லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா.இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம்.இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி.

ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை;பாட முடியவில்லை!ஒரே கூச்சல்!அவமானம் கண்ணீராக கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள்,ஹென்னா.

ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான்.அது ஒரு மாக கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது!

தன் அம்மா சொல்லிக்கொடுத்த பாடலை பாடி,தன் பிஞ்சு கால்,கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான்.விசில்,கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது!சில்லறைகள் சீறிப் பறந்தன.

சில்லறைகளை பொறுக்கினான்,சார்லி.பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம்!
'சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்;என்னால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!' மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது!

தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி...

மேடைப்பாடல்,துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை!பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள்.வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள்,தீர்ப்பு இழுத்தது.

தன் பிள்ளைகள் இங்காவது வசதியாக படிக்கட்டும் என்று மூவரும் அநாதை விடுதி ஒன்றுக்குப் போய் சேர்ந்தார்கள்.தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள்.காலக்கொடுமை!அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

சார்லி,ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார்.அங்கேயும் பசி சார்லி,சிட்னியையும் வீதிக்கு துரத்தி சிரித்தது.'அம்மா,அம்மா'என்று கதறி அழுதான் சார்லி.அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை!

ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது!அம்மா ஹென்னா வந்திருந்தாள்!!சார்லி,சிட்னியையும் ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள்!மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானது
அந்த நமக்கும் மீறிய சக்திக்குப் பெயர் தான் அன்பு!

சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது.பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது.பள்ளிகளில் நடக்கும் நாடகம்,நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சம்பாதிக்க தவறவில்லை!

அவன் சார்ந்த நடன,நாடக்குழு அமெரிக்காவிற்கு போகும் சந்தர்ப்பம் வந்தது.அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான் 'ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான்!' என்று.

அடுத்த அய்ந்தாண்டுகளில் அதுதான் நடந்தது.உலகத்தையே கொள்ளையடித்தான்,சாப்ளின்.


ன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான்,அவளின் அண்ணன்.அந்த தோல்வியை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்த்து!பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமணவாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது.தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க,பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு...தீவிர வாசிப்பை மேற்கொண்டார்.தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது!

முதல் படம்
news paper reporter

ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர்.அவர் சைசுக்கு உடைகள் இல்லை எனபதால்,பெரிய சைஸ் தொள தொள பேண்ட்,பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை,ஷு,தொப்பி,கைத்தடி.இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை!இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது!

அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது!

என்னிடம் கதை ஒன்று இருக்கிறது,நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார், சென்னடிடம்,சார்லி.

முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட்,மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார்."அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தயும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?" என்று கேட்டார்.

அதற்கு சாப்ளின் சொன்னார் "முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன்.அந்தப் படம் தோல்வியடைந்தால்,நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்"என்று

அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம்

caught in the rain

ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர...

மலர்கொத்துக்கள்,பேண்டு வாத்தியங்கள்,உயரமான கம்பம்,மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம்!

பசியும்,அவமானங்களும் இதற்கு தானா?நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா?யோசிக்க ஆரம்பித்தார்.
அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி
the immigrant
படம் வெளியானது அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது,இப்படித்தான்!

சார்லி ஏழைகளைப்பற்றியே படம் எடுத்ததால்,பணக்காரர்கள்,எதிரிகளானர்கள்.வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று!

இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் எனபவளை திருமணம் செய்து கொண்டார்.ஆண் குழந்தை பிறந்து இறந்தது,அவன் நினைவாக தயாரன படந்தான்
the kid
லிட்டா கிரே,பவுலட் கோடர்ட்,ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு!

அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்!

புகழின் உச்சியில் இருந்த நேரம்..

"என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி!நான் ஒரு முட்டாள்,அபாக்கியசாலி.நீங்கள் எவ்வளவு உயரமானவர் எனபதை உங்கள் படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்கு தெரிவியுங்கள் கடைசியாக உங்களின் கைகளை பிடித்து கதறி அழு வேண்டும்.என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்! "
என்ற கடிதம் படித்து தன் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்கு பயணமானர்,சாப்ளின்.

பஞ்சையாய்,பராரியாய்,பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள் வெடகமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது.சார்லியை வரவேற்க;வெறி பிடித்த மக்கள் வெள்ளம்!


இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள்!அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது!அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி.இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார்!

கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிய படாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது!

"ஓ வென கதறி அழக்கூ முடியவில்லை அவ்வளவு மக்கள் வெள்ளம்!"

நடு இரவில் ,முகத்தை மப்ளர் கொண்டு மூடி பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான்,அந்த மாக கலைஞன்!

கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது,"இந்த தோற்கும் அன்பு அவளுடையது! அவளது தியாகம்,திறமைகள்,அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால்,நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்! " என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார்!

சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார்!தான் எடுக்கும் பேசாத பற்றி மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு அந்த படந்தான்
city lights
எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம்!

இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்!

உலகம் இயந்திரமாகி வருவதையும்,மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த
modern times
வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்ப புத்தி அமெரிக்க அரசு "கம்யூனிஸ்ட்!"என்று.

அமெரிக்க அரசு லண்டனுக்கு புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து,"உங்கள் சொத்து பறிமுதல் செய்யப் படுகிறது.அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்ய படுவீர்கள்!"

ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார்.

1972 ஆம் வருடம் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது!

1977 இல் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்....


எல்லோரையும்
கண்ணீர் வர
சிரிக்க வைத்த
அந்த மாக கலைஞனின்
மரணம்
அழவைத்தது!


_ஆதிசிவம்









Friday, May 23, 2008

Jakie chan, ஜாக்கி சானின் கதை







அலெக்சாண்டர் உலகப் படையெடுப்பு துவங்குவதற்கு முன்பு தன் சொத்துக்களை எல்லாம் தன் நண்பர்களுக்கு பிரித்து கொடுத்து கொண்டிருந்தார்.

அலெக்சாண்டரின் நண்பர் கோபமாக கேட்டார் ''எல்லாவற்றையையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டால் உன்னிடம் மீதம் என்ன இருக்கும்?''

அலெக்சாண்டர் கம்பீரமாகச் சொன்னார் ''நம்பிக்கை....!'' என்று.




விமர்சனம்

''அறை எண் 305-இல் கடவுள்''

கதை:கடவுள் இரண்டு இளைஞர்களோடு தங்கி,புத்தி புகட்டி விட்டு மீண்டும் கடவுளாக மாறி காணாமல் போவது.

கதையின் கதை:பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை,''இந்த சென்சார் குறுக்கீடு மட்டும் இல்லாமல் என்னைப் படம் எடுக்க அனுமதித்தால் இரண்டே வருடத்தில் ஆடசியைப் பிடித்துக் காட்டுவேன்'' என்றார்,

அப்படி சொன்னது மாதிரியே ஆட்சியைப் பிடித்து இன்று வரை தமிழ்நாடு நாசமாய் போனது தனி வரலாறு.

நிற்க.

''இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி''' பிறகு வந்த இரண்டாம் படம், இது.சரித்திர கால படம் மட்டுமல்ல கிராபிக்ஸ் கோட்டையும் கட்ட தெரியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமோ என்னவோ, படம் முழுக்க கணிப்பொறியை நம்பி....

சென்னையில் ஆன்களுக்கான தங்கும் விடுதியில் நடக்கும் சம்பவங்களே கதைக்களம்.வேலை தேடி அலைவது,வாடகைப் பாக்கி,உணவு விடுதியில் கடன் என்று ஏற்கனவே பார்த்துப் பார்த்து சலித்துப் போன ஆரம்ப காடசிகள்...

வீட்டு மொட்டைமாடியில் பிரகாஷ் ராஜ் வடிவில் பிரகாஷமாக தோன்றுகிறார்,கடவுள்.

புதிய வேகத்தில்,புதிய பாதையில் வேகம் பிடிக்கிறது,படம்.

சிம்பு தேவன் ஒரு முடிவோடுதான் களம் இறங்கியிருக்கிறார்.அத்தனையும் வசனங்களும் சரவெடி!வெடித்து சிதறியிருப்பது அத்தனையும் போலியான நம்பிக்கைகள்.சிரித்த பிறகு இதுக்கு போயா சிரித்தோம் என்று வருத்தப் படத்தேவையில்லை.அத்தனையும் சிந்தனை முத்துக்கள்!

அந்த இரு இளைஞர்களின் கூடவே தங்கி, உங்கள் குறைகளை கண்டுபிடியுங்கள்.அதை சரி செய்யுங்கள்.முன்னேறுங்கள்!என்று தவறுகளை நேர்மையாக சுட்டிக்காட்டி,தூங்கிப் போகிறார்,கடவுள்.

அந்த இருவரும் கடவுளின் சக்தியிருக்கும் பெட்டியைத் திருடி,கண்டபடி ஊர் சுற்றி,நினைத்ததெல்லாம் செய்து விட்டு,மனிதர்களிடம் தோற்றுப் போய்,திரும்பவும் கடவுளிடம் வந்து சேர்கிறார்கள்.

அதுவரை கடவுள் சக்தியை இழந்த கடவுள்
உள்ளூர் பொறுக்கியை தூக்கிப் போட்டு மிதித்து,கடலை விற்று,மூடும் நிலைக்கு வரும் உணவு விடுதியை தன் உழைப்பால் தூக்கி நிறுத்துவது,தன் கழிவறையை தானே சுத்தம் செய்தும் என்று எல்லா கை தட்டல்களையும் பிரகாஷ்ராஜ் ஒருவரே பெற்று விடுகிறார்.


சேதி:கடவுள் ஒரு உதவாக்கரை.நீ முன்னேற நீ தான் முயற்சி செய்ய வேண்டும்!








அம்மா

என்னை தான் அம்மா
அடிப்பால்....
ஏனோ
அவள் முகத்தில்
வலி தெரியும்.....!

கடைசியில்
நிச்சயம் முத்தம்
கிடைக்கும்

ஏனோ
இன்னோரு தரம் அடிக்க மாட்டாளா- என்று
மனசு ஏங்கும்.....

ஒவ்வொரு பிறந்தநாளும்
அம்மாவின்
இனிப்போடு தான்
பிறக்கும்....

கடைசிவரை கேடகவே இல்லை
அம்மாவின் பிறந்த நாளை.....!


-ஆதிசிவம்.





ஆழ்வார்பேட்டை ஆண்டவன்

கமல் அவதாரம்.


நான் நடிகன்தான் ஆனால் என்னால் (முழு நேர நடிகர்கள்)அரசியல்வாதிகளைப் போல நடிக்க முடியாது.நான் நடிக்கும் நடிப்பை மக்களின் வாழ்க்கையிலிருந்து திருடுகிறேன் என்று சொல்லும் கமல் இதுவரை பல்வேறு அமைப்புகள்,நிறுவனங்கள் வழங்கிய விருதுகளின் எண்ணிக்கை 172 உலகில் இதுவரை இருந்தவர்கள்,இப்போது இருப்பவர்கள் யாரும் இவ்வளவு விருதுகள் பரிசுகள் பெற்றதில்லை.

26.4.08 அன்று சென்னையில் ''தசவாதாரம்'' படப் பாடல் வெளியிட்டு விழா நடந்தது.

''எனக்கும் படப்பிடிப்பின்போது 34 இடங்களில் எலும்பு முறிந்து இருக்கிறது'' என்றார், கமல்.

''கமலுக்கும் ஜாக்கி சானும் சில மாத இடைவெளியில், ஒரே தேதியில் பிறந்த அண்ணன்,தம்பிகள்''என்றார்,கலைஞர்.

''வணக்கம் சென்னை'' என்று தமிழில் ஆரம்பித்து கலக்கினார்,ஜாக்கி.

நான் உங்களோடு சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.நீங்கள் ஆகஷன் காடசிகளில் நடித்துக் கொள்ளுங்கள்.நான் காதல் காடசிகளில் நடிக்கிறேன் என்றார்,ஜாக்கி.

நடக்க முடியாமல் வந்த முதல்வர் கலைஞரை ஓடிப்போய் கைத் தாங்கலாக அழைத்து வந்தது,விழா மேடையில் கிடந்த குப்பைகளை பொறுக்கிப் போய் குப்பைத் தொட்டியில் போட்டு ஜாக்கியே விழாவின் நாயகன் என்ற பெயரை தட்டிச் சென்றார்.

இந்திய உணவுகளையும்,தண்ணீரையும் நான் மறுத்தேன் என்பது பொய் என்றும்...

ஹாங்காங் சீன இயக்குநர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.தசவாதாரம் படத்தை நிச்சயம் பாருங்கள்.இன்னும் முன்னைக் காட்டிலும் கடினமாக உழையுங்கள்.ஏனெனில் உலக ரசிகர்களை இந்திய சினிமா தன் பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறது,என்று எச்சரித்தார்,ஜாக்கி தன் இணைய தளம் வழியே....

அதற்கு பெயர்தானே கமலஹாசன்!








இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்.
-ரஷிய பழமொழி.



Monday, May 12, 2008

ஜாக்கி சானின் கதை





எனக்குப் பிடித்த
பூக்களின்
பட்டியலில்
உன்னையும்
சேர்த்திருக்கிறேன்

நான்....!


உனக்குப் பிடித்த
விளையாட்டு
பொம்மைகளின்
வரிசையில் என்னையும்
சேர்த்திருக்கிறாய்

நீ.....!



Wednesday, April 30, 2008

பாரதிகிருஷ்ணகுமார்



( ஜனவரி 2008''உயிர் எழுத்து'' என்ற மாத இதழில் வெளிவந்த ''பாரதிகிருஷ்ண குமார்'' அவர்களின் முதல் சிறுகதை,இது... )


அம்மாவும், அந்தோன் சேக்கவும்




அம்மா ஒருமுறைகூட,தன் தேவைகளுக்காகப் பிறர் உதவியை நாடியது கிடையாது.அந்த ராத்திரியில்,குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு எழுப்பியது ஆச்சரியமாக இருந்து.

"ரொம்பத் தொண்டையெல்லாங் காஞ்சு போச்சு..எந்திரிக்க முடியாம தாகம் அமுக்குது..தம்பீ..தண்ணீ கொண்டாடா... " என்றாள்.

அவள் குரலில் மரணத்தின் நெடி ஏறி விட்டிருந்ததுது.எனக்குப் புலப்படவில்லை.இரவு ஒன்றரை மணியில் இருந்து,காலை ஐந்து மணிக்குள் நாலைந்து சொம்பு குடித்தும் தாகம் தீரவில்லை. உதடுகள் வறண்டு,பிளந்து கிடந்ததுது;துயரம் தருவதாக இருந்தது.நாக்கினால் இரண்டு உதடுகளையும் புரட்டிக்கொண்டே இருந்தாள்.ஐந்தரை மணிக்குக் கொஞ்சம் பால் கொடுத்தேன்.உறங்கப் போகுமுன்,எல்லா சமுத்திரங்களும் வற்றி தூர்ந்து விட்டதாகவும், அனைத்துக் கப்பல்களும் அதனதன் இடத்தில் தரை தட்டி நிற்பதாகவும் சொன்னாள்.தரை தட்டிய கப்பல்களில் இருந்து இறங்கிய மனிதர்கள், தவிப்புடன் கப்பலைச் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள் என்றாள்.ஏதாச்சும் கனவா?என்று கேட்டதும்,புன்னகைத்தாள்.



வீட்டில் முதல் ஆளாய் எழுந்திருக்கும் அம்மா ஏழு மணிக்குப் பிறகும் உறங்குவதால் அப்பா அதிர்ந்து போயிருந்தார்.இரவில் அம்மா தண்ணீர் கேட்டதை,தாகம் அடங்காமல் தவித்ததைக் குழப்பத்துடன் கேட்டுக் கொண்டார்."என் சத்தம் கேட்டும் அவ எந்திரிக்காம இருக்கிறதுதான் ஆச்சரியம்" என்று நான்கைந்து முறை சொன்னபடி,கொல்லையில் பல் விளக்கிக் கொண்டிருந்தார்.தலையணையில் இருந்து தலை இறங்கி, அம்மா வினோதமாகப் படுத்திருப்பதாக வேலம்மா வந்து சொன்னதும் எல்லாம் துயரம் மிக்கதாக மாறிவிட்டது.டாக்டர் உறுதி செய்ததும்,வேலைகள் துவங்கி விட்டன.

உடனே, குளிப்பாட்டி,சுத்தம் செய்து வைப்பதற்காக, அழுதபடி பெண்கள் கூட்டம் கொல்லைப் புறத்தில் சேர்ந்திருந்து.எல்லோருக்கும் ஆள் அனுப்புகிற வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள்.இரண்டாவது தெருவில் இருந்த சித்தி, அம்மாவின் முகத்தோடு முகம் வைத்து அழுது கொண்டிருந்தாள்."எப்பிடியும் சாயங்காலம் அஞ்சு அஞ்சரைக்கு எடுத்துரணும். அக்கம் பக்கத்துல,குழந்தைங்க நிறைய இருக்கு.இப்ப கோவில் பூட்டுனாலும்,ராத்திரி சாமிக்கு வெக்கணும்.குழந்தைங்களையும் , சாமியையும் பட்டினி போட்டுறக் கூடாது" என்றார்,மாமா.

வாசலுக்கு இடதுபுறம்,தெருவைப் பார்த்துப் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பா,இறுதிவரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.ஒரு முறை எழ முயன்று,மயக்கமாகி நாற்காலியிலேயே விழுந்தார்.அழுது கொண்டே இருந்தார்.யாரோடும் பேசவேயில்லை.என்ன ஆச்சு?எப்படி ஆச்சு?என்று கேட்டவரிடம் கூட , அழுகையே பதிலாக தந்து கொண்டிருந்தார்.விசாரிக்க வந்த சிலரின் முகத்தில் அது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருந்து.

அக்கா மட்டும் சென்னையில் இருந்து வரவேண்டும்.அவளும், அத்தானும் பஸ் ஏறிவிட்டதாகவும்,சாயங்காலம் அஞ்சு மணிக்குள் வந்து விடுவார்கள் என்றும் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.யாராவது, எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.எல்லாவற்றிற்கும் தலையாட்டுவது தவிர எதுவும் செய்யத் தோன்றவில்லை.எங்கும் துயரத்தின் சாயல்கள் பெருகிக்கொண்டே இருந்தன.நான் மட்டுமே அறிந்திருந்த என் ஒற்றை நிழல்,பல்கி பெருகி ...எங்கும் நிழல்களின் நெரிசலில் நான் தொலைந்து கிடந்தேன்.

"தலை முடி இறக்கணும் தம்பி" என்று சொல்லி விட்டு, சித்தப்பா கூர்ந்து பார்த்தார். சம்மதம் என்று தலையசைத்தேன்."எங்க முடியாது சொல்லியிருவியோன்னு பயந்தேன்...நம்ம புள்ளைங்க பாசமானதுங்க.. "என்று சொல்லிக் கொண்டே போனார்.

எல்லோரது இயக்கத்திலும்,ஒரு கடிகாரம் இணைந்து ஓடுவது புலப்பட்டது.சில நூறு கடிகாரங்களின் ஓசை மட்டும் உருவாகி,ஓசை பெரிதாகி,எல்லாக் கடிகாரங்களும் ஒரு சேரப் பன்னிரண்டு மணியை ஒலிக்கிற பேரோசை உள்ளுக்குள் அறைந்தது."வாய் விட்டு அழுதுரணும்" என்று என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.

அழுவதற்கான என் முயற்சிகள்தோற்றுப் போன துயரமும் என்னோடு சேர்ந்து கொண்டது. நம் துயரம் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதல்ல அந்தக் கவலை.சேர்ந்து அழுது கண்ணீர் பெருக்கி, ஆறுதல் கொள்வது இயலாது போனது.சிரமத்தையும்,கடுமையான மன அழுத்ததையும் தந்தது.எதுவானாலும் ,சாயங்காலம் அஞ்சு,அஞ்சரை மணிவரை தான்.

ஏதோ வேலையாக, வீட்டுக்குள் போவது மாதிரி, அம்மாவைப் பார்க்கப் போனேன்.அறையின் மய்யத்தில் அம்மா.என்ன வேலை சொன்னாலும்,உடனே அதைச் செய்ய தயாராக இருப்பதாக,இருந்து முகம். வாயின் வலது புறமிருந்து லேசாக பால் கசிந்து கொண்டிருந்து.இடது நாசியின் முகப்பில் வேர்வை துளிகள் மாதிரி
ரத்தம்
பூத்திருந்து..என்னைப் பார்த்த அத்தை என்னைக் காட்டி அம்மாவிடம் ஏதோ நியாயம் கேட்டது.அத்தையின் அழுகைக்குள் அமிழ்ந்து மூழ்கியது அவளது நியாயம்.என்ன வேலை சொன்னாலும்...அதிலும் அப்பா என்ன சொன்னாலும், உடனே ஒப்புக் கொண்டு சம்மதிக்கிற அதே முகத்துடன் அம்மா.

ஒரு முறைகூட மறுத்துப் பேசியதில்லை அம்மா.அக்காவுக்கும், எனக்கும் அது தீராத ஆச்சர்யம்.அம்மா மாதிரி சொன்னதை மட்டும் செய்கிற ஒரு பெண் கிடைத்தால்,அப்பா மாதிரி நிறைய சம்பாதிக்க முடியும் என்று உறவில் எல்லோரும்சொன்னார்கள்.அக்காவின் திருமணத்திற்குப் பிறகு,எனக்கும் அப்பாவுக்கும் இடையில் அதிகரித்த இடைவெளி வீட்டின் நிம்மதியைச் சீர்குலைத்தது.


"அவரு என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுக்க"என்றுதான் அம்மா எப்போதும் சொல்வது."எப்படித்தான் காலமெல்லாம் அவரு சொன்னதுக்குத் தலையாட்டிக்கிட்டே இருக்க?" என்று ஒரு தடவ அம்மாவிடம் கேட்ட நாள்,மறக்க முடியாத நாளாகி விட்டது.

"உங்க அக்காவுக்கு மூணு வயசு... அதுவரைக்கும் அவரு சொல்லி,நா எதுக்கும் மறுப்புச் சொன்னதில்லை...உங்க அத்தைக்கு அவர் பார்த்த பையன வேண்டாமுன்னு சொன்னேன்.மறுத்துப் பேசுனது அதுதான் முத தடவ...அந்த மாப்பிள்ளைப் பையன எனக்கும் தெரியும்.அவன் என்னயவே ஒரு மாதிரி பாக்குற பையன்...அதனாலதான் அதக்கூட சொன்னேன்.உங்க அப்பா ரொம்பக் கோபமாகி,ரெண்டு கையையும் எம் முகத்துக்கு நேரா நீட்டிக்கிட்டு, "பொண்டாட்டின்னா சொன்ன பேச்சு கேக்கணும்;சொன்ன வேலையச் செய்யணும்; எதுத்து ஒரு வார்த்த பேசின..உன்னையும் கொன்னுட்டு, உம் புள்ளையையும் கொன்னுட்டு, நானும் செத்துருவேன்.முட்டை போடுற கோழிக்குத்தான் பொச்செரிச்சல் தெரியும்...பேருக்குத்தான் சேவல்..அந்த மரியாதையக் காப்பாத்து " என்று சொல்லிட்டு அழ ஆரம்பிச்சுட்டாரு..அதாம் முதலுங் கடைசியும்.இனி என்னிக்கும் எதுத்துப் பேசீர மாட்டேன்.குழந்தையிலே இருந்தே அவருக்கு கொஞ்சம் மன பாதிப்பு இருந்துருக்குன்னு அப்புறதான் தெரிஞ்சுது.மத்தவங்களுக்குத் தான் இது வீடு...எனக்கு ஆஸ்பத்திரியுங் கூட.."


அக்கா வந்து சேர இன்னும் தாமதம் ஆகும் என்றார்கள்.மயானக் கரையில் காத்திருப்பது என்று முடிவானது.ஆறரை மணிக்கெல்லாம் மூலக்கரை மயானம் வந்தாகி விட்டது.அப்பாவும், அவரது வெகு சில நண்பர்களும்,உறவினர்களும்,எனது
நண்பர்களும் தனித்தனியே அவரவர் வசதிக்கு நின்றும், உட்கார்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.நான் மட்டும் தனியாக அம்மாவுக்குப் பக்கத்தில் உடகார்ந்திருந்தேன்.யாரோ தொட்டுக் கூப்பிட்டார்கள்,''வாங்க அந்தப்பக்கம் உக்காருவோம்'' என்று எழுந்து போனேன்.

நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனுக்கு அந்தப்புறம் நண்பர்கள் அமர்ந்திருந்தார்கள்.பற்ற வைத்த ஒரு சிகரெட்டை செல்வா என்னிடம் நீட்டினார்.புகை இதமாக இருந்து.நிறைய சிகரெட்டுகள் புகைந்து கொண்டிருந்தன.''அக்கா வர இன்னும் ஒன் அவர் ஆகும்...சமீத்துல படிச்ச கதை ஏதாவது இருந்தா சொல்லுங்க''என்றார்,செல்வா,ஆமோதிப்பது போல,எல்லோரும் மவுனமாக இருந்தார்கள்,இளங்கோ , என்னைத் தொட்டு, கதை சொல்லுமாறு ஜாடை செய்தார்.இரண்டு முறை ஆழ்ந்து புகைத்துக்கொண்டேன்..துக்கம் அடைத்திருந்த தொண்டைக் குழிக்குள் புகை சுழன்று இறங்கியது.மெல்லிய குரலில் அந்தோன் சேக்கவ் எழுதிய 'ஆறாவது வார்டு' கதையைச் சொல்லத் துவங்கினேன்.

''மேல் நோக்கி நீண்டிருக்கும் ஆணிகள் அடர்ந்த, சாயம் போன அந்த வேலியடைப்பு,நமது மருத்துவமனைகளுக்கும்,சிறைச்சாலைகளுக்கும் உரித்தான கேடு கெட்ட சோகத்தோற்றத்துடன் ''கதை துவங்கியது'' உலகிலுள்ள வன்முறை அனைத்தும் தனது முதுகுக்குப் பின்னால் ஒன்று சேர்ந்து தம்மை விரட்டுவதாக அஞ்சி....'' வீதியில் ஓடிய இவான் தீமித்ரிச்சும்,''வலி என்பது வலியைப் பற்றிய ஒர் உயிர்த்துடிப்புள்ள எண்ணமே ஆகும்.மன வலிமையின் துணை கொண்டு அந்த எண்ணத்தை விட்டொழித்தால்,வலி மறைந்து போகும்'' என்று அறிந்து உணர்ந்த டாகடர் ஆந்திரேய் எபிமிச்சும்...
மூலகரை மயானத்தில் திரிந்தார்கள்.

கதை முடிந்ததும்,எல்லோரும் மவுனமாக கலைந்து போனார்கள்.நான் மீண்டும் அம்மாவிடம் வந்தேன்.


இறந்து கிடந்தது அம்மாவே அல்ல; அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் அதிகாரம்.


""-பாரதிகிருஷ்ண குமார்""



Monday, April 7, 2008

ஹைக்கூ பார்வை ஜாக்கி சானின் கதை-3

ஹைக்கூ பார்வை ஜாக்கி சானின் கதை-3






''குமுதம்'' வார இதழின் நிறுவனர் எஸ்.ஏ.பி தான் வாங்கும் அத்தனை அகராதிகளிலும் முடியாது எனக்குறிக்கும் இம்பாசிபிள்-"impossible" என்ற ஆங்கில வார்த்தை இடம் பெறும் பக்கத்தை கிழித்துப் போட்டுவிடுவாராம்.
.



நதியில் பிட்டித்த தீ!
....கன்னட வாழ் தமிழர்களின் மனநிலை ஒரு பறவைப்
பார்வை...



பெங்களூரில் 60 விழுக்காடு தமிழர்கள் மென்பொருள் வல்லுநர்களாக
இருக்கிறார்கள்.கன்னட படங்களை விட தமிழ் படங்கள் நன்றாக ஒடுவதால்,பொறாமைத் தீ தான் கன்னட பிரச்னைக்கு காரணம்!

தங்களின் பிள்ளைகளை கன்னடத்தில் பாடங்களை படிக்க ஒப்புக்கொண்டும்,பெங்களூரைப் பற்றி,கருநாடக அரசாங்கத்தைப் பiற்றிய ஆதரவு நிலையில் ,இவ்வளவு ஏன் காவேரி பிரச்னையில் கூட கருநாடாகவுக்கு ஆதரவாக கருநாடக மாநில உணர்வில்தான் கருநாடக வாழ் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற விவரம்

எல்லா கன்னடர்களுக்கும் தெரியும் என்றாலும்...

இன்னொரு பக்கம் தமிழ் நாளிதழ்கள்,தமிழ் சேனல்,தமிழர் பண்டிகைகள் என்று எதையும்,யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் தமிழனின் அடையாளங்களோடு இருப்பது கன்னடர்களின் கண்களை குத்தி,உறுத்துகிறது...!

இது இப்படி இருக்க....

சென்னைத் தீவுத்திடலில் ஏபரல் 6ந்தேதி (2008) ''தெலுங்கு'' திருமலை திருப்பதிக்கு
திருக்கல்யணமாம்.திருப்பதி தேவஸ்தானமே விழா ஏற்பாடுகளை செய்கிறதாம்!மண்டபத்திற்கான கட்சி அரங்குகளை பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணி அமைக்கிறாராம்.

திருப்பதியிலேயே செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட லட்டு,பிரசாதங்களை இலவசமாக வழங்குகிறதாம், தேவஸ்தானம்.ஆனால் அதற்கு நுழைவுச்சீட்டு வாங்கி இருக்க வேண்டுமாம்.ஆள் ஒன்றுக்கு சும்மா வெறும் ஆயிரம் மட்டுந்தானாம்!

சிரிக்காதீங்க........

பெங்களூரிலிருந்து ஆதிசிவம்...


ஹைக்கூ பார்வை ஜாக்கி சானின் கதை-3


பசித்தவனுக்கு ரொட்டி(உணவு)தான் கடவுள்.ஒரு நாய் பட்டினி கிடந்தால் கூட இங்கே இருக்கும் அத்தனை மதங்களுக்கும்,கடவுள்களுக்கும் அர்த்தமே இல்லை.
-சுவாமி விவேகானந்தர்.



50 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடிய அந்த கப்பலில் 150-க்கும் மேற்பட்ட புரட்சி வீரர்களை திரட்டிக்கொண்டு பயணம் செய்தது காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவின் விடுதலைப்படை!ஒரு வீரன் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டான்.சுற்றிலும் இருட்டு!ஒரே கூச்சல் குழப்பம்,இருட்டின் சிரிப்பாய் எங்கும் எதிரொலித்தது.ஒரே ஒரு மண்ணெய் விளக்கு மட்டுந்தான்!

''ம்... இதோ காப்பற்றி விட்டேன்'' என்று ஒரு குரல் கேட்டது.அந்த குரல் ''சே குவேரா''வுக்குரியது.கிழக்கின் வெளிச்சமாய்,காஸ்ட்ரோ சொன்னார். ''நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு இது(நீ )தான், சே

அடையாளம்'' என்றார், உணரச்சி ததும்ப..






ஹாலிவுட் பார்வை
bc 10000 கிமு 10000
.




path finder, apocalypto என்ற இரு படங்களின் கலவை,இது! சிறு சிறு கூட்டமாக,தனித் தனி அடையாளங்களோடு,சிறு சிறு கூடாரங்களில் அமைதியாக வாழ்ந்து
வருகிறார்கள்,பனிக்காட்டு மனிதர்கள்.

எப்போதாவது பயங்கர ஆயுதங்களோடு எல்லோரையும் கொன்று விட்டு மீதி இருப்பவர்களை கயிறு கட்டி இழுத்துப் போகிறது ஒரு கூலிப் படை.அப்படிப் பட்ட தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சிறுமி தான்.நாயகி!
நாயகனின் அப்பாவும் அவனை சிறுவயதில் அனாதையாக விட்டு விட்டு அந்த கூலிப்படையின் இரகசியம் தேடிப்போய் தொலைந்து போகிறார்....

நாயகனும்,நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். ஒரு மிகப் பெரிய யானைக் கூட்டம் வருகிறது.வேட்டையில் சிறந்தவர்களே புதிய தலைவர் என்ற அறிவிப்பு வெளியாகிறது
நாயகனுக்கே தலைமை பொறுப்பு வருகிறது.நான் அந்த யானையை தனியாக கொல்ல வில்லை.சந்தர்பவசத்தால் அதுவாகவே தான் ஈட்டில் செருகி செத்துப் போனது,நான் ஒன்றும் வீரன் இல்லை என்கிறான்,இதுவரை தலைவராக இருந்தவரிடம்

''எனக்கு தெரியும்,தலைமை பொறுப்புக்கு வருவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.நீ யே தலைவனாக இரு! '' பழைய தலைவர்.

அந்த கொடூரம் மீண்டும் நிகழ்கிறது! மீண்டும்அந்த கூலிப்படை கொன்று குவிக்கிறது.மீதி
இருப்பவர்களை கயிறு கட்டி இழுத்துப் போகிறது.அந்த கூட்டத்தில் நாயகியும் போகிறாள்...

நாயகி நிலா அழகி,திகட்டாத அழகு,பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அத்தனை அழகு!

சிறு சிறு கூட்டங்களாக இருக்கும் எல்லா பனிக்காட்டு வீரர்களும் அதே காட்டுமிராண்டி கும்பலால் பாதிக்கப்பட்டுத்தான்
இருக்கிறார்கள்.அவர்களும் கடும் கோபத்தில்தான் இருக்கிறார்கள் என்பதையும் அறிகிறான்.

எல்லா சிறு கூட்டங்களைளயும் ஒன்று சேர்கிறான்,நாயகனே எல்லோருக்கும் தலைவனாக வழி நடத்திச் செல்கிறான்.பாலைவனத்தில் மனித நதியாக நகர்ந்து போகிறார்கள்.காதல் காலத்தில் நாயகி காட்டிய நட்சத்திரமே எல்லோருக்கும் திசைகாட்டி...

ஒரு நதியில் தன் நாயகியும்,தன் இன மக்களும் எங்கோ சிறு சிறு படகுகளில் கூட்டிச் செல்வதைப் பார்க்கிறார்கள்.நாயகன் தன்னை நிச்சயம் காப்பாற்றுவான் நம்பிக்கை ஒளி கண்களில் மின்ன
பிரிகிறாள்...நாயகி..

பிடித்துப்போன மக்களை அடித்து,அடிமையாக்கி சூரிய கடவுளுக்கு மிகப்பெரிய கோவில் கட்ட யானைகளோடு மனிதர்களும் மிருகங்களைப் போல நடத்தப்படும்,அந்த இரகசியம் புரிகிறது.

''அவர்களிடம் இருந்தால் தான் அவர்கள் அடிமைகள்,நம்மோடு இருந்தால் அவர்கள் வீரர்கள்'' என்ற வெற்றி முழக்கத்தோடு,அந்த அடிமையாக்கப்பட்ட மக்களுக்கு புரிய வைத்து மக்களோடு மக்களாக கலந்து ,ஆயுதங்களை மண்ணுக்கள் புதைத்து தக்க சமயம் பார்த்து ஒரே நேரத்தில் தாக்குதலை தொடங்குகிறது,அந்த விடுதலைப்படை!....

இறுதில் கடவுளின் பெயரால் ஏய்த்துப் பிழைக்கும் கூட்டத்தின் தலைமைப் பெண்ணை கொலகிறான்,நாயகன்.

தன் இனத்தோடு,நாயகியையும் மீட்கிறான்,நாயகன்!


சேதி:
கடவுளின் பெயரால் ஏய்த்துப் பிழைக்கும் அந்த அந்த தேசிய அவமானம் இன்றும் கூட தொடர்கிறது

என்பதுதான் அந்த படம் நமக்கு சொல்லும்,சொல்ல வரும் செய்தி!
<









எருமை மாடு,ஆண்,பெண் இம்மூன்று பிரிவை சேர்ந்தவர்களில் அதிகம் உழைப்பது யார் என்று ஆய்வு நடத்தினார்கள்.அதில் அதிகம் உழைப்பது பெண்,அடுத்து எருமைமாடு,கடைசியாக ஆண் என்று ஆய்வு சொன்னது.


-பிருந்தா கரத்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)








ஹைக்கூ பார்வையில்...
ஜாக்கிசானியினின் கதை-3
தீயின் சுறுப்பாய் ...
தலையில் தீப்பிடித்த சுழலும் பம்பரமாய் இயங்குவது தான் சீனர்களின் இயல்பு.
அந்த தீ ஜாக்கிசானையும் பற்றிக் கொண்டது ஆச்சரியமில்லைதான்!

தனது பள்ளி மாணவர்களை திரைப்படத்துறைக்கு அனுப்பும் காலகட்டம் வந்தது.

ஜாக்கி எட்டு வயதில் 1962-ஆம் ஆண்டில் நடித்து வெளிவந்த படம்

big and little wong tiin bar

ஜாக்கியால் ஒரு இடத்தில் சும்மாவே உட்காரவே முடியாது..வேக வேகமாகச் சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு,கெட்ட பழக்கம் என்கிறது,மருத்துவம்.ஆனால் ஜாக்கியால் இந்த கெட்ட பழக்கத்தை விட முடியவில்லை.

அப்படிப்பட்ட ஜாக்கி, ஆரம்ப நாடகளில் ''அங்கே போய் படு; மூச்சின்றி கிட'' என்று பெரும்பாலும் செத்த பிணமாக 'நடிக்கும்' வேலைகளையே கொடுத்து வேடிக்கைப் பார்த்தது,திரைத்துறை!பிறகு சண்டை காட்சிகளில் ஈடுபட்டு,உயரமான கட்டிடங்களில் தாவி ஏறுவது,குதிப்பது போன்ற ''டூப்''பாக நடித்தார்.கொஞ்ச கொஞ்சமாக சண்டைக் காட்சிகளில் நடிப்பது என்பதிலிருந்து,சண்டைக் காட்சிகளைத் தானே வடிவமைக்கும் நிபுணராக உயர்ந்தார்.
''இதையெல்லாம் பார்த்த ஒரு படத்தயாரிப்பாளர் ஒருவர் நீயே நடிக்கலாமே'' என்று கூற அப்படி நடித்து 1976-þø வெளிவந்த படந்தான்
little tiger from kanton

அதே நேரத்தில் ஹாங்காங் திரைத்துறையில் ஒரு மாபெரும் மாற்றம்,வெற்றிடம் நிகழ்ந்தது.
''ப்ரூஸ் லீ'' யின் மரணம்!ப்ரூஸ் லீ-யை உருவாக்கிய பெருமை இயக்குநர் லோவி என்பவரைத்தான் சேரும்.அவரின் அதிரடிப்பார்வை ஜாக்கியை குறி வைத்தது.ஜாக்கியை ப்ரூஸ் லீ யாக்க விரும்பினார்.

ஆனால் அதற்கு ஜாக்கி ஒத்துக் கொள்ளவில்லை!
நான்,நானாகவே இருக்க விரும்புகிறேன்.அப்படி நடித்து 1978-þல் வெளிவந்த படந்தான்
half a loaf of kung foo


அதிரடிப் பார்வை தொடரும்.....








எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது,அப்போதைய கருநாடக முதலமைச்சர் குண்டுராவ் வீட்டில் சாப்பிட்டு விட்டு,(கவேரி தண்ணீர் பிரச்னை காரணமாக) ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்காமல் கிளம்பி விட்டார், அந்த

புரடசித்தலைவர்


-புரட்சித் தமிழன் ''சத்யராஜ்''.

Sunday, February 24, 2008






மின்னஞ்சலில் வந்த சிறுகதை
தூறல்!!!


டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது...

வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.

இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல... மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க... அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது. அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.

அருகே கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.

கடைசியாக சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.

ச்சீ என்ன பொண்ணு இவ... யாராவது பார்த்தா... உடனே சிரிக்கணுமா???

பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்... i-podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்... வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள். 7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.

சரியாக 11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங். தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் "C" போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.

சரியாக வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!! இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.

மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்.

"கார்த்திக்... இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி. பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?" அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி.

"சாரி... நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே... எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு" சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை. தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.

அருகே இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.

வழக்கம் போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.

பஸ் வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்.

"ஹாய்... நான் இங்க உக்காரலாமா?" ஒரு பெண்ணின் குரல்.
திரும்பி பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.

வழக்கத்தைவிட i-podல் சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன். அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.

தினம் செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள். இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.

அன்றும் லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள். திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.

சரி, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.

எப்போழுதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்.

"ரொம்ப தேங்கஸ்ங்க..." தயங்கியவாறே சொன்னேன்.

"ஓ!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்" புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்.

"இல்லைங்க...சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்"

"ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க...
பை த வே, ஐ அம் ஆர்த்தி"

"ஐ அம் கார்த்திக்"

இன்று பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன்...

"கார்த்திக்... உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க"

"உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க"

"ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்"

"சரிங்க"

"பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க"

"சரி... போலாமா?"

சாப்பிட்டு விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.

அடுத்த நாள் மீண்டும் பஸ் பயணம்...

"ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்... தனியா சாப்பிட்டு இருந்த... உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?"

"நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்"

"ஏன்?"

"யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது"

"யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?"

"வேணாம். உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்"

"இல்ல... யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்"

"ஏன்கிட்ட செல் போன் இல்ல"

"என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?"

"3 வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல. அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்"

"சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு... " குறித்து கொண்டாள்

காலையும், மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்... இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.

அடுத்த நாள்...

"ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?"

"ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன். போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்"

"சரி... இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்"

"எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?"

"நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்... ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல"

"நிஜமாவா?"

"ஆமாம்... சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்"

"சரி..."

வார இறுதியன்று கடைக்கு சென்றோம்...

"லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ... இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்"

"எனக்கு சாதரண மாடலே போதும்... காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்"

"நீ சும்மா இரு...நான் செலக்ட் பண்றேன்... உனக்கு ஒன்னும் தெரியாது"

"சரிங்க... நீங்களே எடுங்க"

கடைசியாக பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது... ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.

"பாத்தியா... உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்"

"சரி சரி... எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க... வா போகலாம்"

அன்றே 5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.

வீட்டிற்கு சென்றவுடன் போன் செய்து பேசினாள்...

திங்கள் காலை அலுவலகத்தில்

"கார்த்திக்... புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு...கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு" ஹாசினி

"ஆமாம்... நேத்துதான் வாங்கினேன்"

"எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?" ராஜிவ்

"உங்களுக்கு இல்லாமலா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க..."
அனைவரும் அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.

ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்கு போன் வந்தது.

"கார்த்திக்... இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி...
நான் மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"

"ஓகே... நான் பாத்துக்கறேன்"

"கார்த்திக்... புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க... ஏதாவது விசேஷமா?" மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது.

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க... சும்மா வாங்கனும்னு தோனுச்சு... வாங்கிட்டேன்"

"சரி... இன்னைக்கு டீம் லஞ்ச்... எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்"

"ஷுர்... கண்டிப்பா வரேன்"

மதியம் அனைவரிடமும் நன்றாக பேசினேன்... எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க... நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு...

வாழ்க்கையில் ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.

ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்.

"கார்த்திக் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்... எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?"

"ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல... எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... அதனால சொன்னேன்"

"சரி... அப்ப அப்ப போன் பண்ணு"

"கண்டிப்பா பண்றேன்"

அவள் சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.
அவளிடமிருந்து போனும் வரவில்லை. அவளும் வரவில்லை. ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது.

"ஹலோ கார்த்திக்கா???"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்... நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்" அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது

"கடைசியா???" இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
"ஆர்த்திக்கு என்னாச்சு???"

"நீங்க இங்க வாங்க... அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல... சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க... நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்"

அந்த நம்பர் மனதில் பதிந்தது...

சென்னைக்கு அப்போழுதே நேராக புறப்பட்டேன்...

ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம். எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.

ஹாஸ்பிட்டலில் காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்... என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

"கார்த்தி... அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு"

"ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல"

"நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்"
ஒரு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்

"அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே... உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல."

"ஆர்த்தி... உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட"

"ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்...
நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி... என்ன சரியா???"

ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்...

காலை 7 மணி...

வழக்கம் போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்.

"ஹாய்... நான் இங்க உக்காரலாமா?"

"தாராளமா"

"என் பேர் கார்த்திக்..."

"நான் பாலாஜி..."

(ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்...)





சீனம்,ஆங்கிலம்,அரபி, ஸ்பானிஷ்,தமிழ் இந்த ஆறு மொழிகளும் இனிவரும் நூற்றாண்டில் உதிராமல் நிலைத்து நிற்கும் என்கிறது,எதிர்கால கணிப்பு.
-கவிப்பேரரசு வைரமுத்து.




பச்சைத் தமிழன்
ஒரு தடவை காமராஜர் வீட்டுக்குப் படையெடுத்த நிருபர்கள் கூட்டம் கேட்டது
"நீங்கள் தேர்தலில் தோற்றுப் போய்விட்டீர்கள்.அதற்கு காரணம் சொல்ல முடியுமா? " என்று.
"முக்கியமான விஷயம் காரணத்தை இப்ப நான் சொல்லப் போறேன்.எல்லோரும் எழுதிக் கொள்ளுங்கள் "என்றதும்
பெருத்த அமைதி நிலவியது.கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னார்,காமராஜர்.
"மக்கள் ஓட்டுப் போடவில்லை.அதனால் நான் தோற்றுப்போனேன்.இது தான் காரணம்" என்று.


சரித்திரத் தேர்ச்சி கொள் !


400 வருடங்கள் ஸ்பெயின் நாட்டுக்கும் பிறகு அமெரிக்காவின் பிடியிலும் சிக்கி சீரழிந்த நாட்டை விடுதலை போரிட்டு மீட்டவர்கள் "பிடல் காஸ்ட்ரோ"வும் ,"சேகுவேரா" வும் தான்.
பிறகு கம்யூனிச நாடாக மலர்ந்த கியூபா ஒரே வருடத்தில் எழுதப் படிக்க கற்றுக்கொண்ட நாடாக உலகத்தின் முன்னால் தலை நிமிர்ந்து நின்றது...!






உன் வெற்றி எது என்று தீர்மானி.அதுவே உன் வாழ்க்கை,கனவு என்று அந்த குறிக்கோளை ஒட்டியே வாழ்ந்து வா!மூளை,தசைகள்,நரம்புகள் என உன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும்,அதுவே நிறைந்திருக்கட்டும்.


-சுவாமி விவேகானந்தர்








(john rambo-4) "ஜான் ராம்போ-4"

ஆங்கில பட விமர்சனம்



இறுகிய, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகம்,சிரிக்கவே தெரியாதோ என்று எண்ண வைக்கும் உதடுகள் என்று வரும் கதாநாயகன் சில்வஸ்டர் ஸ்டாலோனுக்கு வயது 61-க்கு மேல் என்றால் நம்பவே முடியவில்லை .அத்தனை இளமை !
உடலை இளமையாக்கும் அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட ஊசியை பயன்படுத்துவதாக அவர் மேல் குற்றச்சாட்டு வேறு இருக்கிறது.

"இதில் வரும் சம்பவங்கள் மியன்மார் நாட்டில் நடந்த சம்பவங்களை குறிபிடுவன அல்ல! " என்ற அறிவிப்போடு தொடங்குகிற படம் ஏமாற்றவில்லை !

இராணுவ பின்னணியில் பின்னி எடுக்கும் சில்வஸ்டர் ஸ்டாலோனின் ராம்போ பட வரிசையில் இதுவரை வந்த மூன்று படங்களையும் தானே முறியடித்த வெற்றிப் படம்,இது !


மியான்மர் அரசு அந்த நாட்டில் இந்த படத்தை தடை செய்திருக்கிறது.தன் நாட்டு மக்களை தன் நாட்டு இராணுவமே கொன்று குவித்த சம்பவங்கள், மியான்மர் மக்களை இந்தப் படம் மீண்டும் புரட்சிக்கு தயார்படுத்தி விடும் என்று அஞ்சி தடை செய்திருக்கிறது.இது ஒன்றே போதும் இந்த படத்தின் சிறப்பை உலகுக்குச் சொல்ல....

கையில் எந்த ஆயுதமும் இல்லாத அப்பாவி மக்களை இராணுவ லாரி ஒன்றில் ஏற்றி வந்து,மோதினால் வெடிக்கும் தண்ணீர் கண்ணி வெடிகளை வயலில் நிரம்பி இருக்கும் தண்ணீருக்குள் வீசியப் பிறகு, கட்டாயப்படுத்தி ஓட விட்டு,இரத்த பந்தாக வெடித்து சிதறி,அதில் தப்பியவ்ர்களை உட்கார வைத்து பின்புறமாக சுட்டுக் கொல்லும் காட்சிகளை பார்த்து நடுங்கி போகிறது மனசு...!

இராணுவ ஆட்சி நடக்கும் மியான்மார் போய் அங்கு அடிப்பட்ட மக்களுக்கு,அடிப்படை உதவிகள் மருந்து போட்டு ஆறுதல் சொல்ல ஒரு குழு பயணம் செய்கிறது.அந்த குழுவை கொண்டு செல்லும் படகோட்டியாக ஸ்டாலோன்.

அந்த குழு சேவை செய்யும் கிராமமே பீரங்கி குண்டுகளால்,தூள் தூளாக்கி,கை கால்கள் உடல் என சிதறி,ஒரு சிறுமியின் தலை மட்டும் ஒற்றை குச்சியில் குத்தி நிற்கும் அவலம் என ஆங்கில படத்துக்கான சிறப்பான காட்சியமைப்புகள்.

அந்த குழுவை பிடித்து கடத்தி போய் விடுகிறது அந்த நாட்டு இராணுவம்.

அந்த குழுவை மீட்க,அவர்களின் இராணுவத்திற்குள் ஊடுருவி புகுந்து,பீரங்கியை கைப்பற்றி.அந்த இராணுவத்தையும்,இராணுவத் தலைவனையும் ஒழித்துக் கட்டிகாத்து கிழியும் குண்டுகளின் சப்தங்களுக்கு இடையே குழுவையும் மீட்க....
படம் முடிகிறது.

யுத்த காட்சிகள் உண்மையான யுத்த களத்தை அவர்களுக்கே தெரியாமல் காமிரா கொண்டு படமாக்கியது போல அவ்வளவு துல்லியம்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய பட்டியலில் சேர்க்கிறது.

நமக்கும் பக்கத்தில் நடக்கும் இலங்கை சண்டையை ஞாபகபடுத்தாமல் இல்லை.

இந்த படத்தில் வரும் மியான்மார் மக்களுக்கும் கூட பிடித்த வாசகம் ....
"எதற்கும் பிரயோஜனம் இல்லாமல்,வாழ்வதை விட எதையாவது செய்வதற்கு சாகலாம்....!"



-சுபாஷ்சிவம்












ஹைக்கூ பார்வை
ஜாக்கி சானின் கதை-2






"கோங் சாங்" என்ற சீனப் பெயருக்கு பரந்த மனம் கொண்ட சுறுசுறுப்பானவன் என்று அர்த்தம்.இதுதான் ஜாக்கி சானின் உண்மையான பெயர்.

" ஜாக்கி சான்" என்ற பெயர் தனக்குத் தானே முடி சூட்டிக்கொண்ட பெயர்.
ஜாக்கியின் ஏழாவது வயதில் அவனின் பெற்றோர்கள் சீன அமைப்பின் ஆசிரியர் யூ சா யூ யெனிடம் ஒரு சொற்ப தொகைக்கு விற்று விட்டுப் போனார்கள்.அவர்களை வழி அனுப்ப விமான நிலையம் வந்த சிறுவன் ஜாக்கியின் இரு கண்களிலும் கண்ணீர்..
அம்மா அடித்தால் அப்பா மேல் முட்டி அழலாம்.அப்பா அடித்தால் அம்மா மேல் முட்டி அழலாம்

ஆனால் அந்த அழுகைக்கு காரணமே அம்மாவும் அப்பாவும் தான் என்ற போது யாராலும் ஆறுதல் சொல்ல முடிய வில்லை.அழுது அழுது கண்கள் வீங்கிய பிறகு தன் சட்டையைக் கொண்டு தானே கண்ணீர் துடைத்தான்.

கண்ணுக்கு முன்னால் புதிய உலகம் தெரிந்தது.எதற்கு அழ வேண்டும், அதுவும் சுத்த வீரன்?
அந்த நாடக அமைப்பில் அவனை போலவே நிறைய சிறுவர்கள்.அந்த அமைப்பில் பயிலும் மாணவர்கள் எல்லோருக்கும் சரியாகப் படிக்க தெரிகிறதோ இல்லையோ அடிதடி,சிலம்பம் ,கராத்தே,குதிப்பது,தாவுவது போன்ற எல்லா சர்க்கஸ் வேலைகளிலும் பிய்த்து உதறுவார்கள்.
யாராவது ஒரு மாணவர் தவறு செய்தாலும் எல்லா மாணவர்களையும் நிற்க வைத்து "பிரம்படி தண்டனை " கிடைக்கும்.அப்படிப்பட்ட முரட்டுத்தனமான பள்ளி அது!

நோய் வந்தால் கூட யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.சாதாரண மாணவர்களை விட நோய் வந்த மாணவன் அதிகமாக பயிற்சி செய்ய வேண்டும்.அதற்கு ஜாக்கியின் ஆசிரியர் சொல்லும் காரணம் வயிற்றைக் கலக்கும்..

"எவ்வளவுக்கெவ்வளவு வியர்வை அதிகம் வெளி ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வியாதி குணமாகும் " என்பார் .

(இலேசான தலைவலி,காய்ச்சல் வந்தால் நீங்கள் கூட முயன்று பாருங்கள் வியர்க்க விறுவிறுக்கும் ஓடுதல், விரைவாக நடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுபாருங்கள் அது உண்மை தான் என்று தெரியும் நானும் கூட அது போல முயன்று பார்த்தேன்,அது உண்மைதான் -ஆதி. )



ஒவ்வொரு சனிக்கிழமையும் நடக்கும் பந்தயத்தில் அவர் தோற்றுப்போனாலும் எல்லா மாணவர்களுக்கும் அடி நிச்சயம்!

ஆசிரியரின் தண்டனைகள் கூட விசித்திரமானது .தூக்கம் வந்தால் கூட ஒருவர் தலையை இன்னொருவர் தலையோடு "பளீர் பளீர் " என்று மோதி பொறி கலங்க வைப்பார்.

ஆசிரியர் ஜாக்கியை வளர்ப்பு மகனாக தத்து எடுத்து
வளர்க்க ஆரம்பித்தார்,ஆனாலும் ஜக்கியால் வரிசையாக நிற்க வைத்து விழும் பிரம்படி தண்டனையிலுருந்து தப்பிக்கத்தான் முடியவே இல்லை.... கடைசிவரை !



அதிரடிப் பார்வை தொடரும்....





இந்த வலைத் தளத்தின் பக்கங்கள் முழுக்க முழுக்க http://www.google.com/transliterate/indic/Tamil இந்த முகவரியில் உள்ள இணையத்தளத்தின் மூலம் எளிமையான

ammaa (type) =அம்மா (in tamil-"ammaa")

முறையில் தட்டச்சு செயப்பட்டது.

Blog Archive